தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசியபோது, எம்.ஜி.ஆர் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, "எம்.ஜி.ஆர் ஒரு நல்ல நோக்கத்திற்காகக் கட்சி அமைத்தார். எம்.ஜி.ஆர் பெயரை பேசாமல் எந்த கட்சியும் அரசியல் நடத்த முடியாது. அந்த வகையில் விஜய்யும் எம்.ஜி.ஆரை குறிப்பிட்டுப் பேசியது எங்களுக்கு சந்தோஷம்தான்" என்று கூறினார்.
ஆனால், அதே நேரத்தில், "எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்" என்று விஜய்யை அவர் மறைமுகமாக விமர்சனம் செய்தார்.
மேலும், "ஒன்றை மட்டும் என்னால் தெளிவாகச் சொல்ல முடியும். தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு அண்ணா தி.மு.க தலைமையிலான ஆட்சிதான் அமையும்" என்றும் அவர் உறுதியாக கூறினார்.