அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை கோவையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி, நாளை முதல் மூன்று நாட்களுக்கு கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு-2025-ஐ தொடங்கி வைக்க கோவை வருகிறார்.
இந்த கோவை பயணத்தின்போது, பிரதமர் மோடியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் சந்தித்து பேச வாய்ப்புள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி தலைவரான ஜி.கே. வாசன் ஆகிய இருவரும் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளனர்.
வரவிருக்கும் நாட்களில் பாஜக மற்றும் அதிமுக இடையே உள்ள உறவு குறித்து பேசப்பட வாய்ப்பு உள்ளதால், நாளை நடைபெறவுள்ள இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.