தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருக்கும் போதே அதை விட்டுவிட்டு அரசியலுக்கு போயிருக்கிறார் நடிகர் விஜய். இது அவரை திரையில் ரசிக்கும் அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சிதான் என்றாலும் அவரை நாட்டின் முதல்வராக பார்க்கும் ஆசை அவர்களிடம் இருப்பதால் அவர்களே அதை சமரசம் செய்து கொண்டார்கள். ஆனாலும் இன்னமும் விஜய்க்கு இந்த அரசியல் எல்லாம் வேண்டாம். அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கலாம். நல்ல பொழுதுபோக்கான படங்களை அவரால் கொடுக்க முடியும். சினிமா உலகமும் நன்றாக இருக்கும் என்றெல்லாம் பலரும் சொல்லி வருகிறார்கள்.
ஆனால் விஜயோ 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று குறியாக இருக்கிறார். எந்த மேடையில் பேசினாலும் திமுகவை மட்டுமே அவர் அதிகமாக விமர்சனம் செய்து வருகிறார். அதுவும் கரூர் சம்பவம் அவருக்கு திமுகவின் மீது கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒருபக்கம் விஜய் ரசிகர்கள் எல்லோருமே விஜய்க்கு ஓட்டு போட மாட்டார்கள். அவரைப் பார்க்க மக்கள் கூடுவார்கள். ஆனால் அது ஓட்டாக மாறாது என்று விஜயை பிடிக்காதவர்களும், திமுகவினரும் சொல்லி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகையும் ஆந்திர அரசியலில் இருக்கும் நடிகை ரோஜா விஜய் பற்றி கருத்து தெரிவித்த போது விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது என சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை. பெயர், புகழ் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் நேரில் சென்றாலும் விமர்சிக்கிறார்கள். செல்லாவிட்டாலும் விமர்சிக்கிறார்கள் என்று விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஒருமுறை நான் விஜயை சந்தித்தபோது நீங்கள் ஏன் அம்மா, அண்ணி போன்ற வேடங்களில் நடிக்கிறீர்கள்|.. உங்களை நான் இன்னும் கதாநாயகியாகத்தான் பார்க்கிறேன் என்று சொன்னார் விஜய். அதோடு சரி.. அம்மா, அண்ணி போன்ற வேடங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என சொல்லி இருக்கிறார் ரோஜா.