பிகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து, வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், பிகார் தேர்தல் முடிவுகள் குறித்த தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
"பிகார் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு பிகார் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். அவர்களின் பொய்களையும், ஜனநாயகத்தை குறைமதிப்புக்கு உட்படுத்தும் முயற்சிகளையும் பிகார் மக்கள் நிராகரித்துள்ளனர்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிலவும் கூட்டுத் தலைமை மற்றும் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீதான மக்களின் நம்பிக்கையை பிகார் தேர்தல் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது," என்று அவர் பாராட்டியுள்ளார்.
இந்த வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோருக்கு அஇஅதிமுக சார்பில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பிகாரில் ஆளும் NDA கூட்டணி, எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.