டெல்லி செங்கோட்டை அருகே சமீபத்தில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு முன்னதாக, பயங்கரவாதிகள் ஹமாஸ் குழு பாணியில் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக NIA விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த திட்டம் தோல்வியடைந்ததாலேயே கார் குண்டு வெடிப்பை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர்.
கார் குண்டு வெடிப்பில் 15 பேர் பலியான நிலையில், NIA இதுகுறித்துத் தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தெற்கு காஷ்மீரை சேர்ந்த ஜசிர் பிலால் வானி என்ற தொழில்நுட்ப வல்லுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ட்ரோன்களை இயக்குவதிலும், ஏவுகணைகளை தயாரிப்பதிலும் திறமை பெற்றவர். கார் வெடிப்புச் சம்பவத்துக்கு ஜசிர் தொழில்நுட்ப ரீதியாக உதவியுள்ளார்.
NIA விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜசிரின் தந்தை, ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் உமர் உன் நபிக்கு அடைக்கலம் கொடுத்த அமீர் ரஷீத் அலியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
NIA-வின் தொடர் நடவடிக்கைகளால் பயங்கரவாதிகளின் பெரிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.