Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்டப்பகலில் பள்ளி மாணவியை கொலை செய்யும் அளவிற்கு, துணிச்சல் எங்கிருந்து வந்தது? ஈபிஎஸ் ஆவேசம்

Advertiesment
பள்ளி

Mahendran

, புதன், 19 நவம்பர் 2025 (15:16 IST)
ராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் கத்தியால் குத்தி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவிக்கு கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலைக்கு யார் பொறுப்பு?
 
பட்டப்பகலில் பள்ளி மாணவியை கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?
 
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே இத்தகைய கொடூரக் குற்றச் செயல்களுக்கு முழுமுதற் காரணம்.
 
திரு. முக ஸ்டாலின் அவர்களே "உங்கள் ஆட்சியில் அடுத்த நிமிடம் பாதுகாப்பாக இருக்க முடியுமா?" என்ற அச்சத்துடனே ஒவ்வொரு பொழுதையும் பெண்கள் கடக்க வேண்டிய அவலச் சூழல், தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு இல்லையா? இதற்கு நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா?
 
பெண்ணியம் போற்றும் தமிழகத்தை, பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே- இது உங்களை உறுத்தவில்லையா?
 
ராமேஸ்வரம் பள்ளி மாணவியை கொலை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

TN TET 2026: சிறப்பு டெட் தேர்வு!.. விண்ணப்பங்கள் வரவேற்பு!.. முழு தகவல்!...