ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகே சேராங்கோட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஷாலினி இன்று காலை கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
அதே பகுதியை சேர்ந்த முனிராஜ் என்பவர், ஷாலினியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். மாணவி ஷாலினி அவரது காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனிராஜ், போதையில் பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் குத்திக் கொலை செய்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை மீட்டு ராமேசுவரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த தகவலின் பேரில் உடனடியாக செயல்பட்ட காவல்துறையினர், கொலையாளி முனிராஜை கைது செய்தனர். காதல் மறுப்பால் நடந்த இக்கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.