கல்லூரி மாணவ மாணவிகளின் வங்கிக் கணக்குகள் சைபர் மோசடிகளுக்கு பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மோசடி கும்பல்கள் மாணவர்களுக்கு சிறு தொகையைக் கொடுத்து, அவர்கள் பெயரில் வங்கி கணக்குகளையும், சிம் கார்டுகளையும் தொடங்க வைக்கின்றன. பின்னர், இந்த கணக்குகளை பயன்படுத்தி, ரூ. 8 கோடி வரை சைபர் குற்றப் பணப்பரிமாற்றங்களை நடத்தியுள்ளன. சில மாணவர்கள் ATM மூலம் பணம் எடுத்துக் கொடுக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
பணம் கிடைக்குமே என்ற ஆசையில் வங்கிக் கணக்கு விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம். உங்கள் கணக்கு விவரங்களைப் பகிர்ந்தாலோ அல்லது மோசடிக் கும்பல் பயன்படுத்த அனுமதித்தாலோ, நீங்கள் குற்றவாளியாகச்சிக்குவீர்கள் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஈடுபட்ட சென்னை கணேஷ் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.