சென்னை சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், கே.கே. நகர், எம்.ஜி.ஆர். நகர், சௌகார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை இன்று அதிகாலை முதல் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 21 வாகனங்களில் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சைதன்யா அடுக்குமாடி குடியிருப்பிலும் அமலாக்கத்துறை சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இரும்பு வியாபாரி நிர்மல் குமார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும், அதேபோல் சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலனியில் உள்ள கலைச்செல்வன் என்பவரது வீட்டிலும் சோதனை நடந்து வருவதாகவும் தகவல்கள் அறிய வந்துள்ளன.
திருவேங்கட நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலும் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை இந்த சோதனையை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியில் உள்ளன.
சென்னையில் உள்ள பல இடங்களில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.