தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள டிக்வா புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலோர மற்றும் காவிரிப் படுகை மாவட்டங்களில் அதிகனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தற்போது இது மேலும் தீவிரமடைந்து, இன்னும் 3 மணிநேரத்தில் டிக்வா புயலாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 730 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு - தென்கிழக்கே 640 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணிநேரத்தில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசம் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் அச்சுறுத்தல் காரணமாகத் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.