வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சூழலின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்கான மழை எச்சரிக்கையில் உள்ள முக்கிய மாவட்டங்கள் பின்வருமாறு: அரியலூர், கோவை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி
மேலும், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், மற்றும் விழுப்புரம் ஆகிய வடதமிழக மாவட்டங்களிலும், டெல்டா பகுதிகளில் மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.
யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.