வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் உள்ள ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இலங்கை அருகே வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதை அடுத்து, தமிழகத்தில் உள்ள சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாகவும், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
மேலும், புயலால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பேரிடர் படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.