பெங்களூருவின் அதியுயர் பாதுகாப்பு சிறையான பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கைதிகள் மது விருந்தில் நடனமாடிய வீடியோ வைரலான நிலையில், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கைதிகள் சிறையில் உள்ள சமையலறைக் மூலம் பெற்ற ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களை பயன்படுத்தி, தங்களின் அறைகளுக்குள்ளேயே மதுபானங்களை தயாரித்து விருந்து நடத்தியுள்ளனர்.
சில முக்கிய குற்றவாளிகள் சிறைக்குள்ளேயே எண்ணெய் தயாரிக்கும் சட்டவிரோத மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் ஆள் சேர்ப்பு ஆசாமி போன்றோர் அங்கீகரிக்கப்படாத சலுகைகளை பெறுவது தொடர்பான காட்சிகள் சமீபத்தில் வெளியானது.
இந்தச் சம்பவம், சிறை நிர்வாகத்தின் பாதுகாப்பு மீறல்கள் மற்றும் ஆழமாக வேரூன்றிய ஊழலை காட்டுகிறது. இதையடுத்து, கர்நாடக அரசு தலைமைச் சிறை கண்காணிப்பாளர் உட்படப் பல உயர் அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் அல்லது மாற்றம் செய்து உத்தரவிட்டதுடன், உயர் மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
உள்துறை அமைச்சர், குற்றவாளிகளுக்கு சிறைச்சாலையே புகலிடமாக இருக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.