வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் பகுதி அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நீடித்து வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் பங்களாதேஷ் நோக்கி சென்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஏற்படும் வளிமண்டல சுழற்சியால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 3 மற்றும் 4ம் தேதி தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 5, 6, 7 தேதிகளில் வட தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் தென் தமிழகத்திம் சில இடங்களிலும், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
Edit by Prasanth.K