வடகிழக்கு பருவமழை தொடங்கி நடந்து வரும் நிலையில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதியிலேயே தொடங்கி விட்டாலும் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவி வந்தது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
அவ்வாறாக இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், சேலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், காரைக்காலின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,
மேலும் நாளை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K