Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம்: 2 பேர் மீது வழக்குப்பதிவு!

Mahendran
வெள்ளி, 6 டிசம்பர் 2024 (11:05 IST)
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய விவகாரத்தில், இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது.

சமீபத்தில் உருவான ஃபெஞ்சால் புயலின் காரணமாக, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தின் அரசூர், இருவேல்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், நிவாரண உதவி கேட்டு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர்.

போராட்டம் செய்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பொன்முடி சென்றபோது, அவர் மீது மக்கள் சேற்றை வாரி வீசியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது சேற்றை வீசியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனுடன், இந்த விவகாரத்தில் இரண்டு பேர் மீது கூடுதலாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புயல் பாதிப்பு: இன்று தமிழகம் வருகிறது மத்திய ஆய்வுக்குழு..

விஜய் வேணாம்னு சொல்லல.. விகடன் ஏன் இப்படி செய்தார்கள்? - திருமாவளவனின் முழு விளக்க அறிக்கை!

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம்! பாஜக பிரமுகர் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு!

புஷ்பா 2 பார்க்க சென்ற பெண் பலி! அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு!

விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளாதது ஏன்? - திருமாவளவனே அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments