Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்திற்கு பெருமை: அமைச்சர் தங்கம் தென்னரசு..!

Advertiesment
பிரதமர் மோடி

Mahendran

, வெள்ளி, 25 ஜூலை 2025 (15:23 IST)
கங்கைகொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர இருக்கும் நிலையில், அவரது வருகை தமிழகத்தின் பெருமை என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று அடையாறு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 
"கங்கைகொண்ட சோழபுரம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட தலைநகரம். அங்குள்ள பொன்னேரி ஏறத்தாழ 700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் பாசனப் பரப்பு 1,374 ஏக்கர் உள்ளது. அங்குள்ள விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில், இந்த ஏரியை சுற்றுலாத் தளமாக மாற்ற ரூ.19.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்ட சோழபுரம், குருவாயூர் கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கும் பாசனத்திற்கும் இது ஒரு மாபெரும் வரப்பிரசாதமாக இருக்கும்."
 
மேலும், "ராஜேந்திர சோழனின் கடாரம் படையெடுப்பு மற்றும் கடல் கடந்த படையெடுப்பின் 1000வது ஆண்டைக் குறிக்கும் வகையில் பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வருகை தர உள்ளார். இது தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ள பெரும் பெருமையாகும்" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
 
பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட தி.மு.க. அமைச்சர்கள் பலரும் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு அவரது வருகையை பெருமை என்று குறிப்பிட்ட அரசியல் அரங்கில் விவாதத்தை எழுப்பியுள்ளது. 

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலஸ்தீனத்தை தனி நாடாக்க பிரான்ஸ் முடிவு! அதிர்ச்சியில் உறைந்த இஸ்ரேல்!