விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய தேர்தல் ஆணையமும் பாஜகவும் இணைந்து தமிழகத்தில் சதி செய்வதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். பிகாரில் நடந்ததுபோல, தமிழகத்திலும் தேர்தல் முடிவுகளை தில்லுமுல்லு செய்யத் திட்டமிடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிகளை அவர் கடுமையாக எதிர்த்தார். குறுகிய காலத்தில் இந்த பணிகளை செய்வது உள்நோக்கம் கொண்டது என்றும், இது எதிர்ப்பு குரல் கொடுக்கும் வாக்காளர்களை நீக்குவதற்கான நடவடிக்கை என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், இது குடியுரிமை சட்டத்தை மறைமுகமாக கொண்டுவருவதற்கான முயற்சியாகவும் இருக்கலாம் என்று அவர் சந்தேகம் எழுப்பினார்.
இந்த சதி நடவடிக்கைக்கு எதிராக, நவம்பர் 24 ஆம் தேதி விசிக சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளதாகவும் அவர் கூறினார்.