சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR)' பணி தொடங்க உள்ளது. இந்த பணியின் அவசியம் மற்றும் நடைமுறைகள் குறித்து விவாதிக்க, இன்று மாலை சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட 6 தேசியக் கட்சிகள் மற்றும் 6 மாநில கட்சிகள் என மொத்தம் 12 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இதில் பங்கேற்கின்றன.
முன்னதாக பீகாரில் நடந்த திருத்த பணியில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், தமிழ்நாட்டில் வெளிப்படைத்தன்மையுடன் இந்த பணியை தொடங்க தேர்தல் ஆணையம் முனைப்புடன் உள்ளது. மாவட்ட அளவிலும் இக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.