ஜன சூராஜ் கட்சி தலைவர் பிரஷாந்த் கிஷோர், பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் தனது பெயரை பதிவு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு மாநிலங்களில் வாக்காளராக இருப்பது சட்டப்படி விதிமீறலாகும்.
மேற்கு வங்கத்தில், அவர் முதல்வர் மம்தா பானர்ஜியின் தொகுதியான பவானிபூர் சட்டமன்ற தொகுதியிலும், பீகாரில் தனது பூர்வீக கிராமமான கோனார் உள்ள கர்காஹர் சட்டமன்ற தொகுதியிலும் வாக்காளராக பதிவு செய்துள்ளார்.
இந்த் தகவல் வெளியானதையடுத்து, இந்தியத் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பிரஷாந்த் கிஷோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சட்டவிரோத பதிவு குறித்து மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பிரஷாந்த் கிஷோரின் ஜன சூராஜ் கட்சி இந்த ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பிரஷாந்த் கிஷோர் தரப்பில் இருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.