Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை கனகாவின் தந்தை இயக்குனர் தேவதாஸ் காலமானார்

Advertiesment
நடிகை கனகா

Bala

, திங்கள், 1 டிசம்பர் 2025 (16:58 IST)
80 காலகட்டத்தில் மிக உச்சத்தில் இருந்த நடிகை கனகா. ரஜினி, ராமராஜன், சரத்குமார் என அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஒரு உச்ச நடிகையாக திகழ்ந்தார். கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் தான் அவர் மிகவும் பிரபலமானார். கனகா என்றாலே அந்த ரெட்டை ஜடை ரிப்பன் அவருடைய மேக்கப் இதுதான் ஞாபகத்திற்கு வரும்.
 
பெரும்பாலான படங்களில் தாவணி பாவாடை சட்டையுடனேயே வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர் கனகா. இன்று அவருடைய அப்பாவும் இயக்குனருமான தேவதாஸ் இறந்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகை தேவிகாவுக்கும் தேவதாசுக்கும் பிறந்தவர் தான் கனகா. கனகா 3 1/2 வயது குழந்தையாக இருக்கும்பொழுது இவரை தூக்கிக்கொண்டு கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார் தேவிகா.
 
தேவிகாவுக்கும் அவருடைய கணவரான தேவதாசுக்கும் இடையே சொத்து பிரச்சனை போய்க்கொண்டிருக்க இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதனால் சிறு வயதில் இருக்கும் பொழுதே கனகாவை தூக்கிக் கொண்டு தேவிகா சென்று விட்டாராம். அதிலிருந்து இன்று வரை தேவதாஸ் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். எக்காரணம் கொண்டும் தன் சொத்துக்களை மட்டும் உன் அப்பாவுக்கு கொடுத்துவிடாதே என்று தன் அம்மா சொன்னதாக கனகா கூறினார்.
 
அது மட்டுமல்ல தேவிகா வெகுளி என்றும் கனகா அவரை ஏமாற்றி தேவிகாவின் சொத்தை கனகா வாங்கி விட்டதாகவும் தன் மகள் கனகா மீது தேவதாஸ் ஒரு சமயம் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கு இப்போது வரை நீதிமன்றத்தில் இருந்து வருகிறது .சிறுவயதிலிருந்தே தன் தந்தையுடன் சேர்ந்து வாழாமலேயே இப்போது வரைக்கும் கனகாவும் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
 
 பல ஆண்டுகளாக அவர் எங்கு இருக்கிறார் எப்படி இருக்கிறார் என்று கூட தெரியாமல் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு தான் அவரை குட்டி பத்மினி ஒரு ஹோட்டலில்  சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்த சூழ்நிலையில்தான் இன்று உடல்நிலை காரணமாக கனகாவின் தந்தை தேவதாஸ் காலமானார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும்போது தொகுதி மக்களை கேட்டுத்தான் நீக்கினாரா? ஈபிஎஸ்க்கு டிடிவி கேள்வி