நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி தற்போது முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். கட்சி துவங்கியது முதலே அவர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்
. நாம் தமிழர், அதிமுக, பாஜக போன்ற கட்சிகளின் பெயரை கூட அவர் சொல்வதில்லை. முழுக்க முழுக்க விஜயின் டார்கெட் திமுகவாக மட்டுமே இருக்கிறது.
கலைஞர் கருணாநிதிக்கு பின் அவரின் மகன் மு.க.ஸ்டாலின், அவருக்கு பின் அவரின் மகன் உதயநிதி என தமிழகத்தை ஆள்வதில் விஜய்க்கு விருப்பமில்லை. வாரிசு அரசியலை அவர் வெறுக்கிறார். எனவே, அதை எதிர்த்தே அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார் என தவெகவினர் சொல்கிறார்கள்.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே விஜயின் நோக்கமாக இருக்கிறது.
அதேநேரம் அவர் அதிமுக-பாஜக கூட்டணி இணைந்தால் மட்டுமே அது நடக்கும்.. அவர் தனித்து போட்டு விட்டால் வாக்குகள் பிரிந்து திமுக வெற்றி பெறவே அது உதவும் என அரசியல் விமர்சிகர்கள் கூறி வருகிறார்கள். விஜய் என்ன முடிவெடுக்க போகிறார் என்பது தெரியவில்லை.
இந்நிலையில் விஜய்க்கு நெருக்கமானவராகவும், தவெகவில் முக்கிய பொறுப்பில் இருப்பவருமான ஆதவ் அர்ஜுனா தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர் அரசியல் எதிரி, கொள்கை எதிரி தவிர எங்களுக்கு வேறு யாரும் எதிரி இல்லை. ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்பதே எங்களின் நிலைப்பாடு. இது ஏற்கனவே தலைவர் விஜய் சொல்லிவிட்டார். அப்படி பார்த்தால் அதிமுகவும் எங்களுக்கு எதிரி இல்லை, இன்னும் சொல்லப்போனால் தனிப்பட்ட முறையில் திமுகவும் எங்களுக்கு எதிரி இல்லை.
திமுகவை அழிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை. திமுகவின் சூழ்ச்சிகளில் இருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டும் என நினைக்கிறோம். எனவே, திமுகவை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்களோடு ஒன்று சேருவோம் என தெரிவித்திருக்கிறார்.