கோபியில் நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த விமர்சனத்திற்கு தான் பதிலளிக்க விரும்பவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் இல்லை என்றும், அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை என்றும் செங்கோட்டையன் பதிலளித்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் முக்கிய நிர்வாகியாக இருந்த செங்கோட்டையன், கட்சி விதியை மீறிவிட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியிலிருந்து நீக்கினார். இதனை அடுத்து அவர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கோட்டையனின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் த.வெ.க.வின் வெற்றிக்கு உதவும் வகையில் அமைந்துவிட்டது என்று அதிமுகவின் முன்னணி தலைவர்கள் வருத்தமாகி உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று எடப்பாடி பழனிசாமி கோபியில் நடந்த கூட்டத்தில் செங்கோட்டையனை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் செங்கோட்டையனிடம் கேட்டபோது, "ஈபிஎஸ் பெரிய தலைவர் இல்லை; அவருக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை" என்று பதிலளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.