தென்மேற்கு வங்கக்கடலில் உருவான 'டிட்வா' புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையிலும், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்த சூழலில், அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள தகவலில், வடக்கு திசையிலிருந்து மிக தீவிரமான அடர்த்தியான மேக கூட்டங்கள் சென்னை நகரத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாகவும், இதனால் பொதுமக்கள் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையை கடந்து, தற்போது சென்னைக்கு அருகே நிலை கொண்டிருக்கும் டிட்வா சின்னத்தின் தாக்கத்தால், நகர் முழுவதும் மழைப்பொழிவு தீவிரமடைந்து வருகிறது.