சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதை அடுத்து பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை அண்ணா சாலையில் மழை நீர் தேங்கி உள்ளதை அடுத்து, அந்த நீரை வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
மேலும் சென்னை மழை காரணமாக சாந்தோம் பகுதியில் மரம் ஒன்று வேரோடு விழுந்து தனியார் பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி ஓஎம்ஆர் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பெரம்பூர் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், அந்த நீரை வெளியேற்ற ஊழியர்கள் தீவிர பணியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சென்னை மக்கள் முன்னெச்சரிக்கையாக தங்களது கார்களை மேம்பாலங்களில் நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.