அமெரிக்கப் பாடகியும் கலாச்சார தூதுவருமான மேரி மில்பென், பிரதமர் நரேந்திர மோடி குறித்து விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
மோடி, டிரம்ப்புக்கு "பயப்படுகிறார்", ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் முடிவெடுக்க டிரம்ப்பை "அனுமதிக்கிறார்" என்று ராகுல் காந்தி 'X'-ல் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த மில்பென், "ராகுல் காந்தி, நீங்கள் சொல்வது தவறு. பிரதமர் மோடி தொலைநோக்குள்ள வியூகத்துடன் செயல்படுகிறார். நாட்டு தலைவர்கள் அனைவரும் தங்கள் நாட்டு நலன்களுக்கே முதலிடம் கொடுப்பர். இத்தகைய தலைமை பண்பை நீங்கள் புரிந்துகொள்ள மாட்டீர்கள், ஏனெனில் உங்களிடம் இந்திய பிரதமராகும் தகுதி இல்லை," என்று விமர்சித்தார். மேலும், "நீங்கள் உங்கள் 'இந்தியா மீது வெறுப்பு' கொண்ட சுற்றுப்பயணத்துக்கு திரும்புவது நல்லது" என்றும் சாடினார்.
முன்னதாக, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துவதாக மோடி உறுதியளித்ததாக டிரம்ப் கூறியதற்கு, "இந்திய நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பதே எங்கள் முன்னுரிமை" என்று இந்திய வெளியுறவு துறை பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.