Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மோடி.. நெகிழ்ச்சியான ட்வீட்..!

Advertiesment
நரேந்திர மோடி

Siva

, செவ்வாய், 7 அக்டோபர் 2025 (13:51 IST)
பிரதமர் நரேந்திர மோடி, தான் முதன்முதலில் குஜராத் மாநில முதலமைச்சராக பதவியேற்ற நாளான  2001ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியை இன்று தனது எக்ஸ் பக்கத்தில் நினைவுகூர்ந்துள்ளார். இதன்மூலம், அரசின் தலைவராகத் தான் கடந்து வந்த 25 ஆண்டு கால பயணத்தை அவர் அசைபோட்டு, இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
தொடர்ச்சியாக 14 ஆண்டுகள் குஜராத் முதல்வராகவும், பின்னர் 2014 முதல் பிரதமராகவும் பதவி வகிக்கும் மோடி, தனது 'எக்ஸ்' தளப் பதிவில், ஆரம்ப கால சவால்களை நினைவுபடுத்தினார். "மிகவும் சவாலான சூழ்நிலையில் நான் பொறுப்பேற்றேன். நிலநடுக்கம், புயல், வறட்சி என சிக்கல்கள் இருந்தன. ஆனால், குஜராத்தை நல்லாட்சியின் ஆற்றல் மையமாக மாற்றினோம்," என்று குறிப்பிட்டார்.
 
அப்போது தனது தாயார், "எப்போதும் ஏழைகளுக்காக உழைக்க வேண்டும்; ஒருபோதும் லஞ்சம் வாங்கக் கூடாது" என அறிவுரை வழங்கியதையும் மோடி பகிர்ந்தார்.
 
கடந்த 11 ஆண்டுகால தேசிய பயணத்தில், 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா உலகின் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாக பிரகாசிப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். "வளர்ந்த பாரதம் என்ற கனவை நனவாக்க, அரசியலமைப்பை வழிகாட்டியாக கொண்டு, இன்னும் கடினமாக உழைப்பேன்" என்று கூறி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆற்றில் துணி துவைத்த பெண்ணை முதலை இழுத்துச் சென்ற பயங்கரம்!