எகிப்தில் நடைபெற்ற உலக தலைவர்கள் மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை தனது நண்பர் என்றும், அவர் அற்புதமாகச் செயல்பட்டு வருகிறார் என்றும், "இந்தியா ஒரு சிறந்த நாடு என்றும் பாராட்டினார். அப்போது அவருக்கு பின்னால் நின்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் புன்னகைத்தார்.
முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உரையாற்றுகையில், அதிபர் டிரம்ப்பின் "இடைவிடாத முயற்சிகளுக்குப்" பிறகு மத்திய கிழக்கில் அமைதி நிலவுவதாகப் பாராட்டினார். இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போரைத் தடுத்து, போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதற்காக, டிரம்ப்பைத் தாங்கள் நோபல் அமைதிப் பரிசுக்கு மீண்டும் பரிந்துரைப்பதாகவும் அறிவித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் மோதலைத் தீர்த்தது உட்பட தான் எட்டு போர்களைத் தீர்த்து வைத்ததாக டிரம்ப் மீண்டும் உரிமை கோரினார். ஆனால், இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் ஜெனரல்களுக்கு ( ) இடையே நடந்த நேரடிப் பேச்சுவார்த்தையால் தான் போர் நிறுத்தம் எட்டப்பட்டது என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.