Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரீல்ஸ் வீடியோவுக்காக ரயிலில் சாகசம் செய்த இளைஞர்.. கை, கால் துண்டானதால் அதிர்ச்சி..!

Siva
ஞாயிறு, 28 ஜூலை 2024 (07:59 IST)
ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்து அதன் மூலம் லைக் பெறும் இளைஞர் ஒருவரின் கை, கால் துண்டானதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஷேக் என்ற இளைஞர் அவ்வப்போது ரயில்களில் கம்பியை பிடித்தபடி பிளாட்பார்மில் கால்கள் தேய்த்தபடி சறுக்கி சாகசத்தில் ஈடுபடுவார்.

அந்த வீடியோவை தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்து ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருவார் என தெரிகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் இந்த சாகசம் செய்த போது விபத்து ஏற்பட்டதால் அவருடைய ஒரு கை மற்றும் ஒரு கால் சேதமானதாக தெரிய வருகிறது.

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஒரு கை ஒரு கால் ஆகியவற்றை வெட்டி எடுத்த பிறகு அவர் தற்போது ஊனமான நிலையில் உள்ளார் என்றும் அவருடைய நிலை மிகவும் பரிதாபகரமான நிலையாக இருக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.

ரயில்வே அதிகாரிகள் இது குறித்து கூறியபோது ’அபாயகரமான வகையில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக ரயில்களில் சாகசம் செய்யும் இளைஞருக்கு எச்சரிக்கை கொடுப்பதாகவும் இதுபோன்று ரீல்ஸ் வீடியோ எடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் ரயிலில் சாகசம் செய்பவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக 9004410735 என்ற செல்போன் எண்ணிலும், 139 என்ற ரயில்வே ஹெல்ப்லைனிலும் புகார் கொடுக்கலாம்" என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Siva

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.. பக்தர்களுக்கு தடை விதித்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு..!

பூண்டி ஏரியில் இருந்து 16,500 கன அடி உபரி நீர்.. வெள்ளத்தில் சிக்கிய பால் வியாபாரி.. சென்னையில் பரபரப்பு..!

நீதிபதிகள் துறவி போல் வாழ வேண்டும், சமூக ஊடகத்தில் கருத்து சொல்ல கூடாது: சுப்ரீம் கோர்ட்

ஒரே நாளில் 1200 புள்ளிகள் சரிந்து 843 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் ஆச்சரியம்..!

பிரியங்கா காந்தியின் முதல் பாராளுமன்ற உரை.. என்ன பேசினார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments