உத்திரபிரதேச மாநிலத்தில், கர்ப்பிணி ஒருவரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ், சாலை குண்டும் குழியுமாக இருந்ததால், அதற்கு மேல் செல்ல முடியாது என்று கூறி நடுரோட்டில் கர்ப்பிணியை இறக்கிவிட்டு சென்றது. அந்த பெண் சேறும் சகதியுமாக உள்ள சாலையில் குழந்தை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	உத்தரப்பிரதேசம் மாநிலம் மிர்சாப்பூர் என்ற பகுதியில் கர்ப்பிணியுடன் சென்ற ஆம்புலன்ஸ், சாலை சேறும் சகதியுமாக இருந்ததை அடுத்து, அதற்கு மேல் ஆம்புலன்ஸை ஓட்ட டிரைவர் மறுத்தார். இதனை அடுத்து, அவர் கர்ப்பிணியை நடுரோட்டில் மனிதாபிமானமின்றி இறக்கிவிட்டார்.
	 
	வேறு வழியின்றி சகதி நிறைந்த சாலையில் இறங்கி நின்ற அந்த கர்ப்பிணிக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவர் சகதிக்கு நடுவிலேயே குழந்தையை பெற்றார். 
	 
	அதீக் அகமது என்பவரின் மனைவி அர்பி பானோ  என்ற பெண்ணுக்கு தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக ஆம்புலன்ஸ் ஊழியர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ள நிலையில், இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.