கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தியபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சில தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சேலம் மாவட்ட கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், கூட்ட நெரிசலின்போது ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து தாக்கியதாகப் பெறப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரில் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, ஆம்புலன்ஸ் வாகனத்தை வெங்கடேசன் மறித்து தாக்கியதாகப் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கரூர் நகர காவல் நிலைய போலீசார் இந்த வழக்கில் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.