மத்திய உள்துறை அமைச்சர் சமீபத்தில் அளித்த பேட்டியில், அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த பிறகும், இன்னொரு பக்கம் விஜய்யுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவது குறித்த முரண்பாடு பற்றி தெரிவித்துள்ளார். 
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை விரிவுபடுத்த விரும்புவதாகவும், எந்த முடிவு எடுத்தாலும் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் ஆலோசனை செய்துதான் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
	 
	விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று அவர் வெளிப்படையாக கூறவில்லை. ஆனால், அதே நேரத்தில், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் அது தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை செய்துதான் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
	 
	விஜய்யுடன் காங்கிரஸ் கட்சியின் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்ற கேள்விக்கு, அனைத்து கட்சிகளும் பேச்சுவார்த்தைக்கு முயற்சிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்றும் அமைச்சர் பதிலளித்துள்ளார். 
	 
	இதன் மூலம், அவர் விஜய்யை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க அமித்ஷா தயாராக இருக்கிறார் என்பதும், பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருவதை அவர் மறைமுகமாகவும் வெளிப்படுத்தி உள்ளார் என்றும் தெரிகிறது.