சமீபத்தில் பீகாரில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் நிதிஷ் குமாரின் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அந்த மாநிலத்தில் முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்வது குறித்து அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டா ஆகியோர் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
தேர்தலுக்கு முன்பு வரை நிதிஷ் குமார் தான் முதலமைச்சராக இருந்த நிலையில், தேர்தலுக்கு பின் அவர் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்ற வாக்குறுதி அளிக்கப்படவில்லை.
மேலும், தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த கட்சியில் இருந்து முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவாரா அல்லது நிதிஷ் குமார் தான் அடுத்த முதலமைச்சராக தொடர்வாரா என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த தேர்தலில் பெற்ற வெற்றிக்கு நிதிஷ் குமாரின் ஆட்சியும் ஒரு முக்கிய காரணம் என்பதால், நிதிஷ் குமாரை தவிர்த்துவிட்டு வேறொருவரை முதலமைச்சராக பாஜக தலைமை தேர்வு செய்யாது என்று கூறப்பட்டு வருகிறது. இருப்பினும், பாஜக மேலிடம் என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.