Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஜினாமா.. மீண்டும் பதவியேற்பது எப்போது?

Advertiesment
Nitish Kumar Resignation

Siva

, திங்கள், 17 நவம்பர் 2025 (13:50 IST)
பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் இன்று தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். ஆளுநர் ஆரிஃப் முகமது கானை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கிய அவர், சட்டமன்றத்தை கலைக்குமாறு பரிந்துரையும் செய்தார்.
 
சமீபத்தில் நடந்து முடிந்த பிகார் சட்டப்பேரவை தேர்தலில், நிதீஷ் குமார் அங்கம் வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி , 202 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி 89 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றன.
 
கூட்டணியின் முடிவின்படி, நிதீஷ் குமார் மீண்டும் பிகார் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவர்  நவம்பர் 20, வியாழக்கிழமை அன்று பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்றம் நவம்பர் 19 ஆம் தேதி கலைக்கப்பட்டு, மறுநாள் புதிய அரசு பதவியேற்கும்.
 
இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!