2025 பீகார் சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கணிக்கின்றன.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில், பாஜக, ஜே.டி.யு. தலைமையிலான NDA கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களைவிட அதிகமாக, சராசரியாக 147 இடங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி சுமார் 90 இடங்களுடன் பின்தங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டைனிக் பாஸ்கர், மேட்ரிஸ் போன்ற நிறுவனங்கள் NDA-வுக்கு 147 முதல் 167 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றன.
அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அவர்களின் புதிய கட்சியான 'ஜன் சுராஜ்', இந்த தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல், அதிகபட்சமாக ஓரிரு இடங்களை மட்டுமே பெறக்கூடும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே தெரியவரும் என்றாலும், அதிக அளவிலான வாக்குப்பதிவு NDA-வுக்கு சாதகமாக மாறியிருக்கலாம் என பார்க்கப்படுகிறது.