Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒருமைல்கல்.. வாக்காளர் பட்டியல் திருத்த பணி குறித்து தேர்தல் ஆணையர்..!

Advertiesment
பிகார்

Mahendran

, திங்கள், 3 நவம்பர் 2025 (12:45 IST)
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பிகாரில் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்த பணியை இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒருமைல்கல் என்றும் பாராட்டியுள்ளார்.
 
ஐஐடி கான்பூரில் பேசிய அவர், உலகில் நடத்தப்பட்ட மிகப்பெரிய சுத்திகரிப்பு பயிற்சியான இது, விரைவில் 12 மாநிலங்களில் 51 கோடி வாக்காளர்களுக்காக நீட்டிக்கப்பட உள்ளது என்றும், இது தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வரலாற்று சாதனை என்றும் குறிப்பிட்டார். இந்த பணி நிறைவடையும்போது மக்கள் இந்தியாவின் ஜனநாயக உரிமையைப் பற்றி பெருமைப்படுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை சிறப்பு தீவிரத் திருத்த பணி நடத்தப்படும் என ஆணையம் அறிவித்துள்ளது. வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனில் பிகார் தேர்தல் ஒரு முன்மாதிரியாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெருநாய்கள் விவகாரம்: ஆஜராகாத தலைமை செயலாளர்களுக்கு கண்டிப்பு.. நவம்பர் 7ஆம் தேதி புதிய உத்தரவு..!