பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றம் அருகே 12 பேர் உயிரிழந்த தற்கொலை தாக்குதல் மற்றும் வானாவில் உள்ள கல்லூரி மீதான தாக்குதல் ஆகியவற்றுக்கு இந்தியாவே காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த இரட்டை தாக்குதல்களும் இந்திய அரசின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளால், பாகிஸ்தானை குலைக்கும் நோக்கத்துடன் நிகழ்த்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
தாக்குதல்களுக்குப் பொறுப்பான தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்புக்கு, இந்தியாவின் கைப்பாவையாக செயல்படும் ஆப்கானிஸ்தான் தாலிபன் ஆதரவு அளிப்பதாகவும் ஷெபாஸ் ஷெரிஃப் குற்றம் சாட்டினார்.
பல ஆண்டுகளாக தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்த பாகிஸ்தான், தற்போது உள்நாட்டு தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், தனது சொந்த தோல்விகளை மறைக்க இந்தியா மீது பழிசுமத்துவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.