உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஷ்டிராவில், பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற மருமகன், தனது மாமியாரால் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஷேக் நதீம் என்பவர், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் மகனுடன் மாமியார் வீட்டிற்குச் சென்றார். சம்பவத்தன்று, வேலை முடிந்து மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஷேக், தூங்கி கொண்டிருந்த தனது 60 வயது மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாமியார், அருகில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து மருமகனின் தலையில் பலமாகத் தாக்கினார். தாக்குதலில் ஷேக் மயக்கமடைந்த பின்னர், அவரது கழுத்தை நெரித்து மாமியார் கொலை செய்தார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், மாமியாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.