பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்குத் தகவல் அளித்ததாக கைது செய்யப்பட்ட குருகிராம் வழக்கறிஞர் ரிஸ்வான் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது நண்பர் முஷாரஃப் அளித்த வாக்குமூலத்தின்படி, ரிஸ்வான் பணம் சேகரிப்பதற்காக ஏழு முறை அமிர்தசரஸுக்கு பயணம் செய்துள்ளார்.
ரிஸ்வான் இரண்டு வங்கி கணக்குகளை பயன்படுத்தியுள்ளார். அதில் ஒரு வங்கிக்கணக்கு வரம்பை மீறியதால் மூடப்பட்டது. இது, பாகிஸ்தான் தரப்பிலிருந்து கோடிக்கணக்கான ஹவாலா நிதி வைப்பு வைக்கப்பட்டு, பஞ்சாபில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதை காட்டுவதாக அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ரிஸ்வான் இதுவரை 41 லட்சம் ரூபாய் ரொக்கத்தை அஜய் அரோரா என்ற நபரிடம் ஒப்படைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை நூஹ் சிறப்பு விசாரணைக் குழு அமிர்தசரஸில் கைது செய்துள்ளது. இவர்களும் ஹவாலா வழியே பணம் பரிமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரிஸ்வானின் லேப்டாப் மற்றும் தொலைபேசியில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.