கேரளாவில், 16 வயதுடைய மகனை தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர தூண்டியதாக கூறி, ஒரு பெண் மற்றும் அவரது லிவ்-இன் துணைவர் மீது UAPA சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
செவிலியராக இங்கிலாந்தில் வசித்து வந்த கேரள பெண்ணின் லிவ்-இன் துணைவர், ஐ.எஸ்.ஐ.எஸ் காணொளிகளை காட்டிச் சிறுவனை மூளைச்சலவை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சிறுவனின் சித்தப்பா புகார் அளித்ததன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.
தனது தாய் ஐ.எஸ்.ஐ.எஸ் சேரும்படி கூறியதாக சிறுவன் ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறுவன் தற்போது கேரளாவுக்குத் திரும்பி, தந்தை வழி உறவினர்களுடன் இருக்கிறான்.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அந்தப் பெண், இது திருமண பிரச்சினை காரணமாக, தனது பிரிந்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த சதி என கூறியுள்ளார். இச்சம்பவம் குடும்பத்தகராறுடன் சம்பந்தப்பட்டிருப்பதால், காவல்துறை அனைத்து கோணங்களிலும் கவனமாக விசாரணை நடத்தி வருகிறது.