Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் உபேந்திரா மனைவி செல்போன் ஹேக்.. லட்சக்கணக்கில் சைபர் குற்றமா?

Advertiesment
உபேந்திரா

Siva

, புதன், 12 நவம்பர் 2025 (15:35 IST)
கன்னட நடிகர் நடிகர் உபேந்திரா மற்றும் அவரது மனைவி பிரியங்கா உபேந்திரா ஆகியோரின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டதில், சுமார் ரூ.1.5 லட்சம் இழப்பீடு ஏற்பட்ட சைபர் குற்ற சம்பவம் தொடர்பாக, பீகார் மாநிலத்தை சேர்ந்த விகாஸ் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
செப்டம்பர் 15 அன்று பிரியங்கா உபேந்திரா ஆன்லைனில் ஆர்டர் செய்த பிறகு வந்த ஒரு சந்தேகத்திற்குரிய லிங்க்கை கிளிக் செய்ததால், அவரது வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. 
 
ஹேக்கர்கள் அவரது தொடர்புகளுக்கு அவசரமாக பணம் கேட்டு செய்திகளை அனுப்பியுள்ளனர். பலர் இதை உண்மை என்று நம்பி பணம் அனுப்பியுள்ளனர். அவர்களது மகனும் ரூ.50,000-ஐ அனுப்பியுள்ளார்.
 
பல பரிவர்த்தனைகளுக்கு பிறகே மோசடியை உணர்ந்த குடும்பத்தினர், சதாசிவன் நகர் போலீசில் புகார் அளித்தனர். சைபர் தடயங்களை கொண்டு பீகாரை சேர்ந்த விகாஸ் குமாரை போலீசார் கைது செய்து பெங்களூருவுக்கு கொண்டு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவமனை காத்திருப்பு பகுதியில் உல்லாசம்.. காதல் ஜோடியின் அநாகரீக செயல்..!