நடிகை அனுபமா பரமேஸ்வரன் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்கி, மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு இணையவழி துன்புறுத்தலில் ஈடுபட்டவர் 20 வயது இளம்பெண் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை பற்றியும், தனது குடும்பத்தினர் மற்றும் சக நடிகர்கள் பற்றியும் தவறான தகவல்களையும், மார்பிங் படங்களையும் மர்ம நபர் பரப்பியதாக அனுபமா பரமேஸ்வரன் வேதனையுடன் தெரிவித்தார். வெறுப்பை பரப்பும் நோக்கத்துடன் பல போலி கணக்குகளை அந்த மர்ம உருவாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து கேரள சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார். விரைவான விசாரணையில், இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் இருந்தவர் தமிழ்நாட்டை சேர்ந்த 20 வயது இளம்பெண் என்பது உறுதி செய்யப்பட்டது.
இளம்பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவரது பெயர் மற்றும் விவரங்களை அனுபமா பரமேஸ்வரன் வெளியிடவில்லை. பிரபலங்கள் மீதான இணையவழி துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.