அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த உலகளாவிய வரிகளுக்கு எதிரான ஒரு முக்கிய வழக்கை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று விசாரித்தது. இந்த வழக்கில், நீதிபதிகள், டிரம்ப் நிர்வாகத்தின் வாதங்கள் குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்பினர்.
தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் மற்றும் நீதிபதி நீல் கோர்சச் உட்பட பல நீதிபதிகள், வரிகளை நியாயப்படுத்த டிரம்ப் நிர்வாகம் பயன்படுத்திய 1977 ஆம் ஆண்டின் IEEPA குறித்து கேள்வி எழுப்பினர். "வரிகளை நியாயப்படுத்த இந்த சட்டம் இதற்கு முன்னர் பயன்படுத்தப்படவில்லை" என்று ராபர்ட்ஸ் குறிப்பிட்டார்.
காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் ஜனாதிபதி வரிகளை விதிக்க முடியுமா? என்பதுதான். வரிகள் விதிக்கும் அதிகாரம் காங்கிரஸுக்கு மட்டுமே உண்டு என்று நீதிபதி கோர்சச் வலியுறுத்தினார்.
நீதிபதிகள் பிரெட் கவனாக் மற்றும் சாமுவேல் அலிடோ ஆகியோர் டிரம்ப் நிர்வாகத்தின் சட்ட விளக்கத்திற்கு ஆதரவாக இருக்கலாம் என்று சமிக்ஞை செய்தனர். இந்த வழக்கு விரைவாக விசாரிக்கப்படுவதால், தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப்பின் வர்த்தக உத்திக்கு இந்த தீர்ப்பு மிகவும் முக்கியமானது.