தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு (SIR) எதிராக, ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு தடை விதித்து, அப்பணிகளை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும் என திமுக கோரியுள்ளது.
நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில், இந்த திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்தே இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கார் மாநிலத்தில் இதேபோன்ற SIR-க்கு எதிரான வழக்கில் இறுதி தீர்ப்பு வராத நிலையில், தமிழகத்தில் இதை மேற்கொள்வது வாக்காளர்களின் உரிமைக்கு எதிரானது என திமுக சுட்டிக்காட்டியுள்ளது.
திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ இந்த மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நவம்பர் 6 அல்லது 7 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.