முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான சதி வேலை என்றும், ஆனால் எந்த சதி நடந்தாலும் 2026-ல் திமுக ஆட்சி நிச்சயம் அமையும் என்றும் தருமபுரியில் பேசினார்.
தேர்தலுக்குக் குறுகிய காலத்தில் அவகாசம் இல்லாமல் திருத்தப் பணி நடப்பதைத் தடுக்கவே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்காதது குறித்துப் பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் 'இரட்டை வேடம்' போடுவதாகக் குற்றம் சாட்டினார். பா.ஜ.க.வின் நடவடிக்கையை எதிர்க்க அவர் பயப்படுகிறார் என்றும், அவர் பா.ஜ.க.வின் 'பாதம் தாங்கி' என்பதையே இது நிரூபிக்கிறது என்றும் விமர்சித்தார்.
"யார் என்ன அவதூறு பரப்பினாலும், 2026-ல் 'தி.மு.க. 2.0 ஆட்சி' அமைவது உறுதி," என்று உறுதியளித்த ஸ்டாலின், 2026 தேர்தல் அ.தி.மு.க. - பா.ஜ.க. பிடியில் இருந்து தமிழகத்தைப் பாதுகாக்கக் கூடியதாக அமையும் என்று கூறினார்.