குற்ற நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் நெட்வொர்க்கில் செயல்பட்ட முக்கிய நபர்களில் ஒருவரான டேனிஷ் சிக்னா என்பவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கோவாவில் கைது செய்துள்ளனர்.
இவர் மும்பை டோங்கிரி பகுதியில் தாவூத்தின் கீழ் ஒரு போதைப்பொருள் தயாரிப்பு ஆலையை நிர்வகித்து வந்ததாக கூறப்படுகிறது. மும்பை மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் போதைப்பொருளை விநியோகிப்பதில் இவர் முக்கியப் பங்கு வகித்ததாக NCB குற்றம் சாட்டுகிறது.
2019 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில், டோங்கிரி போதைப்பொருள் சண்டிகேட் தொடர்பாக டேனிஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தாலும், மீண்டும் சட்டவிரோத வர்த்தகத்தை தொடர்ந்துள்ளார்.
2021-ஆம் ஆண்டில், சுமார் 1,200 கி.மீ தூரம் தேடிய பிறகு ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இவர் கைது செய்யப்பட்டபோது, அவரிடமிருந்து 200 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
தற்போது மும்பை NCB பிரிவினர் நடத்திய நள்ளிரவு நடவடிக்கையில், டேனிஷ் சிக்னா மீண்டும் பிடிபட்டுள்ளார்.