Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேற்குவங்க மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வகுப்பு தோழன் தான் முக்கிய குற்றவாளி.. விசாரணையில் அதிர்ச்சி..!

Advertiesment
கூட்டுப் பாலியல்

Mahendran

, செவ்வாய், 28 அக்டோபர் 2025 (15:22 IST)
மேற்கு வங்கம் துர்காப்பூரில் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான வழக்கில், முக்கிய குற்றவாளியாக ஃபிர்தௌஸ் ஷேக் உட்பட மொத்தம் ஆறு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 
 
குற்றம் சாட்டப்பட்டவர்களில் பாதிக்கப்பட்ட மாணவியின் காதலன் மற்றும் வகுப்பு தோழன் ஆகியோரும் அடங்குவர். வகுப்பு தோழனே இந்த சம்பவத்தின் 'சூத்திரதாரி' என மாணவியின் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
அக்டோபர் 10 அன்று ஒடிசாவை சேர்ந்த அந்த மாணவி வனப்பகுதியில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. ஐந்து நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், ஆறு குற்றவாளிகளும் துர்காப்பூர் துணை பிரிவு நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். 
 
நீதிபதியிடம் தாங்களாகவே ஜாமீன் கோரிய அவர்களின் மனுக்களை நீதிபதி நிராகரித்து, அவர்களை அக்டோபர் 31 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும், விரைவான விசாரணைக்காக, அடுத்த விசாரணைக்கு முன்னர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு நீதிபதி காவல்துறைக்கு வலியுறுத்தினார்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெஸ்ஸி ஏன் வரவில்லை.. கேள்வி கேட்ட நிருபரை தள்ளிய கேரள விளையாட்டு துறை அமைச்சர்..!