ஜெலியோ இ மொபிலிட்டி (Zelio E Mobility) நிறுவனம், 10 முதல் 18
வயதுக்குட்பட்டவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'லெட்டில் கிரேஸி' (Little Gracy) என்ற மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது மணிக்கு 25 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்லக்கூடிய குறைந்த வேக வாகனம் (Non-RTO) என்பதால், இதனை ஓட்ட ஓட்டுநர் உரிமமோ அல்லது வாகன பதிவோ தேவையில்லை. இதன் ஆரம்ப விலை ரூ. 49,500 ஆகும்.
இந்த ஸ்கூட்டர் 48V/60V BLDC மோட்டாருடன் இயங்குகிறது. லீட் ஆசிட் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பேட்டரியைப் பொறுத்து, இது 55 கி.மீ முதல் 75 கி.மீ வரை ரேஞ்ச் வழங்குகிறது.
டிஜிட்டல் மீட்டர், யு.எஸ்.பி சார்ஜிங், சாவி இல்லாத இயக்கம் மற்றும் திருட்டு எதிர்ப்பு அலாரம் போன்ற அம்சங்களை இது கொண்டுள்ளது.