உத்தர பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில், தனது ஒருதலை காதலுக்கு மறுப்பு தெரிவித்த 24 வயது இளம்பெண் ஒருவரை, அவரது உறவினர் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் இன்று காலை நிகழ்ந்துள்ளது.
போலீஸார் அளித்த தகவலின்படி, கொலை செய்யப்பட்டவர் தீபிகா திவாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த கிராமத்திற்கு திரும்பிய தீபிகா, 2022-ல் திருமணம் முடிந்து, ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு தாயாக உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் இன்று காலை தீபிகாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அஜித் குமார் மிஸ்ரா என்பவர் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.
அஜித் குமார் மிஸ்ரா, தனது தாய் மாமாவின் மகளான தீபிகா மீது ஒருதலை காதலில் இருந்தார். தீபிகாவிற்கு திருமணமாகியும், அவருடன் உறவு வைத்துக்கொள்ளும்படி அஜித் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், தீபிகா அவரது விருப்பத்தை மீண்டும் மீண்டும் நிராகரித்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.