பணியில் இருக்கும் காவல்துறை பணியாளர்கள் மன அழுத்தம் மற்றும் வேலைப்பளு காரணமாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், மதுரை உயர் நீதிமன்ற அமர்வு முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல் படை காவலர் மகாலிங்கம் என்பவர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் ஏழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தன்னுடைய தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
பணி அழுத்தம் மற்றும் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துக் காவல்துறையினர் விசாரணை செய்து கொண்டிருக்கின்றனர். மதுரை சிறப்புக் காவல் படை காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.